வெள்ளி, 5 ஏப்ரல், 2013

H.M.H பள்ளிவாசல் திறப்பு விழா


அல்லாஹ்வின் பேரருளால் நேற்று வியாழக்கிழமை 04.04.2013 ஹிஜிரி ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 22 மாலை 5 மணிக் குட்டைய செட்டி தெருவில் புதிதாக கட்டபட்டுள்ள பள்ளி வாசலின் திறப்பு விழா ஹாஜி H.M. ஹனிபா அவர்கலின் தலைமையில், ஹாஜி. டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ், ஹாஜி M.S. அலி அக்பர், ஹாஜி I. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலையில் ஹாஜி கலிமா K. சேக் அப்துல் காதர்  மரைக்காயர் அவர்களால் திறந்து வைக்கபட்டது.






அல்ஹாஜ் மெளலவி ஹாஃபிஜ் M.S. காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி கிராஅத் ஓதி துவக்க, மெளலவி ஹாஃபிஜ் M.S. அஹமத் கபீர் காஷிபி அவர்கள் துவக்கயுரை ஆற்றினார்கள்.




லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபி கல்லூரி முதல்வர் ஹாஜி A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்ற, பெருதிரலான பொது மக்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்கள்





                                             

இப்பள்ளி வாசலின் கட்டிட பணிக்கு பங்காற்றிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். மக்ரீப் தொழுகைக்கு பிறகு இனிப்பு வழங்கி விழா இனிதே நிரைவுப்பேற்றது  





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....