சனி, 13 ஏப்ரல், 2013

கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி



 இன்று 13-04-2013 காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நமதூர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் கல்வி குழு மற்றும் போல் ஸ்டார் இனைந்து நடத்திய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.



   
 நிர்வாக தலைவர் M.S. அலி அக்பர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இலையாங்குடி டாக்டர் ஜாக்கிர் ஹுசைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் கலந்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்கால படிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் அணைத்து சந்தேகங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துடைத்தார்.
  
 முன்பாக L. ஹமிது மரைகாயர் அவர்கள் வரவேற்புரையும் நிகழ்ச்சி சம்பந்தமான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....