புதன், 1 மே, 2013

கைது!!!!!

வன்னியர்கள் தாக்க பட்ட காரணத்துகாக நீதி கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமது தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதியே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இந்தப் போராட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அனுமதி அளித்திருந்தார். பின்னர், இப்போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, தொடர்வண்டி நிலையம் அருகில் மாற்றிக் கொள்ளும்படி காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி போராட்டமும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் மாற்றப்பட்டது. போராட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்ட நிலையில், திடீரென 29-ஆம் தேதி நள்ளிரவில் போராட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக காவல்துறையினர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். போராட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், சரியான காரணம் இல்லாமல் அனுமதியை காவல்துறையினர் ரத்து செய்தது உள்நோக்கம் கொண்டது.
அதன் பின்னர் தடையை மீறி போராட்டம் நடத்தச் சென்ற ராமதாஸை காவல்துறையினர் நடுவழியில் மறித்து கைது செய்திருக்கின்றனர்....
இதன் காரணமாக பரங்கிப்பேட்டையில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....