ஞாயிறு, 31 மார்ச், 2013

H.M.H பள்ளிவாசல்

அல்லாஹ்வின் பேரருளால் வரும் வியாழக்கிழமை 04.04.2013 ஹிஜிரி ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 22 மாலை 5 மணிக் குட்டைய செட்டி தெருவில் புதிதாக கட்டபட்டுள்ள பள்ளி வாசலின் திறப்பு விழா ஹாஜி H.M. ஹனிபா அவர்கலின் தலைமையில், ஹாஜி. டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ், ஹாஜி M.S. அலி அக்பர், ஹாஜி I. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலையில் ஹாஜி கலிமா K. சேக் அப்துல் காதர்  மரைக்காயர் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள்.



      அல்ஹாஜ் மெளலவி ஹாஃபிஜ் M.S. காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி கிராஅத் ஓதி துவக்க, மெளலவி ஹாஃபிஜ் M.S. அஹமத் கபீர் காஷிபி அவர்கள் துவக்கயுரை ஆற்றுகிரார்கள்.





        சிறப்புரையாற்ற லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வர் அரபி கல்லூரி முதல்வர் ஹாஜி A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் வருகை தரஉள்ளார்கள்.


       
        இதுப்போன்ற பள்ளிவாசல்களின் சிறப்பால் நமதூர் மேலும் மேலும் பரக்கத்தையும் ரஹ்மத்தையும் பெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள்....